காதல் கடிதங்கள்

இடுகையிட்டது dinesh ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

அன்று
நீ எனக்கும்
நான் உனக்கும்
எழுதிய காதல் கடிதங்கள்
கலையாத
கனவுகாளாய்..!

மனதில்
புதைந்து போயிருந்த
உணர்வுகளை
பேனா மையில்
கொட்டி தீர்த்து குதுகலித்த
காகித
காலங்களாய்..!

கொட்டும்
மழையில் நீ நனையாமலிருக்க
நனைந்துகொண்ட
ஈரமான
நினைவுகளாய்..!

ஆம்
பாட்டும்
கூத்தும் பரவசமும் நிறைந்த
அந்நாளில்
உன் வார்த்தை மகுடிக்குள்
பெட்டி பாம்பாய்
என்னை அடக்கி வைத்து ரசித்த
அதிசயம் நீ..!

இன்று
அதே ஊரில் நானும்
கரிசல் மண்ணில்
உன் நினைவுகளும்
ஆனால்
நீ மட்டும் இல்லை.!!

உன்னை மட்டுமா இழந்தேன்

இடுகையிட்டது dinesh புதன், 15 ஏப்ரல், 2009

உன்னை மட்டுமா
நான் இழந்தேன்..?
என்னையுமல்லவா
இழந்துவிட்டேன்!

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச்
சாவது
ஒருக்காலும் உசிதமல்ல
நானும் போய்
காத்திருக்க வேண்டும்

என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

பிறப்புச் சூட்சமம்
உரைக்கும் நியதிப்படி
மறுப்பவர்கள் அல்ல-ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்

நீ! பின்னுக்குப் போனால்
வாழ்க்கை
மண்ணாகிப் போகும்
உன்
கண்ணுக்கு முன்னே
போராடு

மெளனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை
எனக்கெனவே
இன்னமும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை
எனக்குக் கேட்காததா!

விழிகளை பறித்தவள்

இடுகையிட்டது dinesh

தென்றலாய்.
வந்தென்னை
தீண்டியவள் நீ!
மின்னலாய் வந்தென்தன்
விழிகளை பறித்தவள் .நீ!

கவியாக மாறி எனக்குள்
காதலை சொன்னவள் நீ!
உடலோடு ஒட்டிய
உயிரானவள் நீ!

உதயத்தின் கீற்றாகி
ஒளி கொடுத்தவள் நீ!
வானத்து நிலாவாகி எனக்குள்
வந்துதித்தவள் நீ!

பெண் என்ற சொல்லுக்கு
பெருமை இட்டவள் நீ!
நட்ப் பென்ற சொல்லுக்கு
நம்பிக்கை இட்டவள் நீ!

புமியிலே காதலை பரப்பி
விட்டவள் நீ!
என்தன் விழிகளிற்க்கு ஒளியாகி
பார்வை இட்டவள் நீ!

சிலுவையாய் உன் நினைவுகளை
என்னில் சுமக்க விட்டவள் நீ!
இத்தனையும் செய்தவளே!
ஏனடி!
இன்றென்னை வெறுத்தாய்..?

என் நினைவுகளை எறிந்தாய்..?
எனை கண்ணீரில்
வாழ விட்டு
எனை ஏண்டி மறந்தாய்.?

இவளது நினைப்பாள்

இடுகையிட்டது dinesh

மயிலிறகின் தொடுதல்
மென்மையானது
என்கிறார்கள்
இசையின் ஸ்வரங்கள்
இனிமையென்று
சொல்கிறார்கள்..
இவர்களுக்கெல்லாம்
எப்படி புரியவைப்பது.?
என்னவள் புன்சிரிப்பே
இவைகளின்
எதிரொளி என்று!!
இம்சை முட்களெல்ளாம்
புறா இறகுகளானது
இவளது நினைப்பாள்
அன்றோ!!!

தேடி அலைகிறேன்

இடுகையிட்டது dinesh

காதல் சுகமான
நெருப்பு என்றார்கள்!
உண்மை தான்
கரும்பாறையான
என் இதயம் கூட
கரும்பாகி விட்டதே!!

காதல் சிணுங்கிடும்
குழந்தை என்றார்கள்!
உணமை தான்
சினுங்கள்களின் சிறையில்
மாட்டிக்கொண்டேனே!!

காதல் உயிரை பருகும்
அமுதம் என்றார்கள்!
உண்மைதான்
என் உயிரோடு
உணர்வுகளும் பறிபோனதே!!

காதல் ஒரு வியாதி
என்றார்கள்!!
அதனால் தான்
அதற்கான மருந்தை
தேடி அலைகிறேன்.

கண்ட நாள்முதலாய்

இடுகையிட்டது dinesh

நீ என்னை பார்க்கும்
போதெல்லாம்
நான் எனது பார்வையை
தேடிக்கொண்டு இருக்கிறேன்..

நீ என்னை பார்த்து
சிரிக்கும் போதெல்லாம்
நான் எனது புன்னகையை
தேடிக்கொண்டு இருக்கிறேன்..

நீ என்னை பார்த்து
பேசும் போதெல்லாம்
நான் எனது வார்த்தைகளை
தேடிக்கொண்டிருக்கிறேன்..

உன்னை கண்ட நாள்முதலாய்
நான் என்னையே
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
நான் உன்னுள் புதைந்தது
தெரியாமல்!!

கொள்ளை

இடுகையிட்டது dinesh

உன் கனவுகள் மட்டும்
போதுமென்றேன்
என் இமைகளை
திருடி விட்டாய்..

உன் நினைவுகளே
என் சுவாசமென்றேன்
என் மூச்சுக்காற்றை
நிறுத்துகிறாய்..

உன் நிழல் தொடர
விரும்புகிறேன்
என் உயிர் வருட
துடிக்கிறாய்..

பெண்ணே நீயேன்ன
கொள்ளைக்காரியா?
நானென்ன
கொள்ளை பொருளா?
கேட்டால் காதலில்
இது சகஐம் என்கிறாயே..!

ஏன் அன்பே இத்தனை கோபம்

இடுகையிட்டது dinesh திங்கள், 13 ஏப்ரல், 2009

அன்பே!
என் இதயமதில்
உன்னை சுமந்து
உன்னை எண்ணி
உனக்காக உயிராக
வாழ்பவனை
ஏன் நீ இன்னும்
கண்டு கொள்ளாமல்
காதலிக்க மறுக்கிறாய்?
நென்சில் நிறைத்து வைத்த
உந்தன் நினைவுகளை
ஏன்? நீ தீயிலிட்டு
கொளுத்த முனைகிறாய்?
இரக்கம் இல்லாமல்
எந்தன் இதயத்தை
ஏன் நீ வெட்ட முனைகிறாய்?
என் அன்பே
ஏன் உனக்கு
என்னில் இத்தனை கோபம்?
தப்பேதும் செய்யாமல்
என்னை ஏன்
தண்டிக்க முனைகிறாய்?
என் எண்ணம் எல்லாம்
உந்தன் நினவை
ஏற்றி வைத்த எந்தன் மனதை
ஏன் அன்பே?
கள்ளன் என்று கயவன் என்று
இரக்கம் இல்லா எந்தன் மீது
கறைகளை அள்ளி வீசுகிறாய்!
என் அன்பே ஏன் உனக்கு?
என்னில் இத்தனை கோபம்?

அடி பெண்ணே!
நீ அழகிதான்
அதறக்காக நீ
எத்தனை பேரை
காதலிப்பாய்?
கட்டலகை காட்டி
காதல் மொழி பேசி
உலகமதில் எத்தனை பேரை
நீ!மணப்பாய்?
வெறி பிடித்து
அலையும் வேடாகியே
காதல் என்ற குறியீட்டால்
இன்னும் எத்தனை பேரை
கற்ப்பழிக்க முனைகிறாய்?
அழகி என்ற ஆணவத்தில்
ஏனடி நீ இன்னும்
சாக்கடைகளை திறக்க
முனைகிறாய்?
பத்தினி போல் வேடம் புளும்
பாதகியே நிறுத்தடி உன்
போலி காதலை
ஏமாற்றி ஏமாற்றி
உன்னால் ஏமந்த மனங்களின்
கண்ணீரில் குழித்தது போதுமடி
நிறுத்தடி உன்
காதல் நாடகத்தை..!

எங்கு போய் ஒளிந்து கொண்டாய்

இடுகையிட்டது dinesh புதன், 1 ஏப்ரல், 2009

காதல் பார்வையால்
என் நெஞ்சை
காயப் படுத்தியவளே!
வசிக மொழியால்
என்னை உன்வசப்
படுத்தியவளே!
காதல் என்ற குறியீட்டால்
எனை கற்ப்பழித்தவளே!
கனவெனும் தேரில் ஏற்றி
எனை இந்த அகிலம் எல்லாம்
காட்டி கொடுத்தவளே!
உந்தன் நினைவு
வானில் எனை தவிக்க விட்டு
நீ மட்டும்
எங்கு போய்
ஒளிந்து கொண்டாய்..?

இதுதான் காதலா?

இடுகையிட்டது dinesh

அன்பே.......
நான் செல்லும்
இடமெல்லாம்
கூடவே உன் நினைவும்
என்னோடு வருகிறதே ...
ஏன்....??

உறங்கும் போது கூட
உன் நினைவோடு.....
என் மனசுமெல்ல
பேச துடிக்கிறதே
ஏன்...??

தலையனையை கட்டியனைத்து
பல முறை
முத்தமிடுகிறதே உதடு...
நீ என நினைத்து
ஏன்...??

எப்பக்கம் திரும்பி பார்த்தாலும்
அப்பக்கம் எல்லாம்-
உன்நிழல் உரு
என் விழியோடுஉரசுகிறதே...
ஏன்....??

யாரேனும் வந்து
எனை விரும்புவதாய்
கூறி விட்டால்.....
அவர் மீது
உமிழ்ந்து விட்டு....
உனை மட்டும் இதயத்தில்...
மனசு கோயில் கட்டி கும்பிடுகிறதே
ஏன்....??

இது தான்...காதலா....??