காதல் நிலா

இடுகையிட்டது dinesh திங்கள், 23 மார்ச், 2009

காகிதங்கள் நனைந்து
காய்கிறது கண்ணீராலே!
பேனாவோ
நடு நடுங்குகிறது
எழுத்துக்களின்
வேகம் கண்டு!

சிந்தனை துளிகள்சேர்த்து
சிற்பியாய் மாறலாமென
சிற்பச் சாயல்களை
படித்து சிறப்பம்சங்கள் வைத்து
சிற்பமாய் செதுக்குகிறேன்
சிந்தனையில் குளிப்பவளை!

கனவுகளில் காணும்
காட்சிகளை கறுப்புப்
பொட்டி கொண்டு
மீட்டுப் பார்த்தாலும்
காயம் கொடுத்தவளை
நிராகரிக்க
காளையிவன் முடியேனடி!

வாக்கியத்தின்
முற்றுப் புள்ளியோடு
முடியாத வரிகள்
முடங்கி முடங்கி
போகும்
ஒற்றையடி பாதையின்
பயணமாய் பயணிக்கிறது
உந்தன் ஒளி தேடி!

இன்பத்துக்குள்ளாகியும்
என்னை இணக்கமில்லாது
ஏறிட்டுப் பார்க்கும்
உந்தன்உறவு கூட
ஓர் புதுமையானதாய்
ஓராயிரம் ஜாடைகள் சொல்லுதடி
இருவருக்கும் மத்தியில்!

காற்றுப் பொதி கூட
காளானை உசிப்பிவிட்டுஎங்கே?
உனது காதலி!
என வினா தொடுத்துவிட்டு
அதோ பாரடா!
உன்னவள் உனக்கு
மேலே
ஒளியாய் இருக்கிறாள்
என்றுஉயிரை விடுகிறது…..!!!!!

காதல் கவிஞனாய்

இடுகையிட்டது dinesh சனி, 7 மார்ச், 2009

உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்

உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான் விரும்பவில்லை

கவிதைக்காய் காத்திருபதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்

காதலனாகத்தான்
காத்திருக்கிறேன்
கவிதையே
காதல் கவிஞனாய்

நீண்டநேரமாய்
காத்திருந்தாலும்
நீ கேட்டால்
ஏன் தான்
சில நேரமாய்
என்றுபொய் சொல்லுகிறேனோ

உனக்காய் காத்திருந்த
இடத்தில்
நான் காணாமல்
போயிருந்தால்
கவலைப்படாதே
என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்

கனவு பொழுதில்

இடுகையிட்டது dinesh

என் கல்லூரிப்
பருவத்திற்குள்
ஒரு கனவு பொழுதில்
நடந்து சென்றேன்...

எப்போதும்
அன்னியமாய் பார்க்கும்
என் பள்ளி அதிபர்
இன்று
ஒரு நேசப் பார்வையோடு...

எம் கடனே மூலதனமாய்
கடை நடத்தும்
மனோ அண்ணன்
கண்டது ஏனோ
கருணை பார்வையோடு...

காற்று வாங்க
நான் ஒதுங்கிய
நூலக நிர்வாகி மட்டும்
எப்போதும் போல்
நூதனமாய் பார்த்துக் கொண்டு...

இந்த வெண்மை உடை
பெண்கள்
அட என் கல்லூரி தேவதைகள்
தான்
இன்று மட்டும்
என் அருகே
புன்னகையோடு எப்படியோ...

எல்லாம் சரிதான்
பார்த்து விட்டு
போகட்டும்
பாவம் தானே
நானும் இந்த கனவில்...

பொறுக்கவில்லை
ஒருவனுக்கு வந்துவிட்டான்
கதவை தட்டிகொண்டு
அறை நண்பன் என்னிடத்தில்...

சிறகுகளின் சாவி

இடுகையிட்டது dinesh

கண்ணீரால்
சுண்டிவிட்டு
மூச்சுக்காற்றை
மூச்சுக்காற்றால்
தூக்கிவிட்டு
நீ
என்னை
நானாக்கிய போது
என் சிறகுகளின்
சாவி
உன்னிடமிருப்பதைக் கண்டு
ஆனந்தப்பட்டேன்
பின்னொரு நாளில்
ஒரு பெரிய
பூட்டாய்ப்போட்டு
என்னைப் பூட்டிவிட்டு
நீ சென்றபோதுதான்
சாவி செய்யும்
கலையை
நானே
அறிந்திருப்பது
அவசியமென்றுஅறிந்துகொண்டேன்

உன்னருகில் நான் வரவே

இடுகையிட்டது dinesh

பிரியம்
என்பது எளிதல்ல,
குறிப்பாக பிரிந்திருக்கும்
தொலை தூரத்தில்.

சந்தேகங்களும்
பயங்களும் சாதாரண
உறவினிடை கொந்தளித்துக்
கொண்டிருக்கும்
இனியும் பிரிந்திருந்தால்

நாமிருந்த
இணையத்தில்
குறைந்தபட்சம்
சிரித்திருந்தோம்,
நம்மின் சந்தேகத்தினிடையே
நலமுடன் நாம்
தெரிந்திருந்தோம்,
நம்மின் கனிவுமிகு காதலினை

அதனால்
நம் பயமெல்லாம்
மாயமாய் மறைந்ததை
நாம் அறிந்துமிருந்தோம்.
ஆனால்
இன்றோ நாம் பிரிந்து உள்ளோம்

அதனால்
சில சமயம் எழும்
சந்தேகங்களை
இயற்கை என
எண்ணிக்கொள்(ல்)வோம்

இமைப்பொழுதில்
உனை நினைக்கையில்
என்றுமில்லாத
எதனையோ இழக்கின்றேன்

உன் புன்னகையின்
மெல்லினத்தை,
உன் அன்புநிறை
சாரீரத்தை,
எனைச்சுற்றி
நீ வளைத்த
உன் இதமான
வளை கரத்தை

உன்மேல்
நான் கொண்ட அன்பு
எத்துனை வலிமையது
என்பதனை உன்னிடம்
நிரூபிக்க விடாமல்
இந்த தூரமும்
என்னை தொந்தரவு செய்கிறது

நீ கொண்டுள்ள பயத்தை,
பாரத்தை
நிரந்தரமாய் நீக்கிடவும்,
உன் கண்ணெதிரே தோண்றி
நிலைத்திருக்கும்
என் அன்பை
உன்னிடத்தில் கொடுத்திடவும்

எனக்கு நீ
எத்துனை உகந்தவள்
என்பதனை இதமாய்
எடுத்துரைத்திடவும்
என் ஏக்கமெல்லாம்
உன்னருகில் நான் வரவே.

உயிர்த் துளிகள்

இடுகையிட்டது dinesh

கொஞ்சம்
கொஞ்சமாக
நானே
உதிர்த்து வைக்கும்
என்உயிர்த் துளிகள்

வாழ்க்கையின்
வாசலிலே
இரத்தப் புள்ளியிட்டு
நரம்புக் கோடுகளால்
வரைந்தகோலங்கள்.

என் இதயத்தைச்
செய்தவளின் பார்வைகள்.
மனிதனாய்ப் பிறந்த
குற்றத்திற்காய்
என் மீது
நானே
நடத்திக் கொண்ட
விசாரணைகள்

இருளைக் கொல்ல
விரலில் கொளுத்திய
நெருப்பு வேதனை
மழையில் நான்
விரித்துப் பிடித்த
தீ குடைகள்.

நீ அஃறிணையாவதா?

இடுகையிட்டது dinesh

நான் சிரிக்க
நீ சிரித்து
நான் அழ
நீ அழுது
நான் முறைக்க
நீ முறைத்து
என் காதலியானாய்....
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு கண்ணாடியும்
இதைத்தானே செய்கிறது

போ என்றேன் போனாய்
வா என்றேன் வந்தாய்
கிட என்றேன் கிடந்தாய்
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு நாய்குட்டியும்
இதைத்தானே செய்கிறது

ஏன் இப்படியென்றபோது
எல்லாமே என் மீது
கொண்ட காதலால்
என்றாய்

என் காதலால்
நீ "அஃறிணையாவதா"?
வேண்டவே வேண்டாம்
போய்விட்டேன் என்றே
போயேபோய் விட்டாய்
நல்லவேளைஏனென்று
கேட்கவில்லை
கேட்டிருந்தால்
என்மீது கொண்ட
காதலால் என்றிருப்பாய்.

பிரிதல் கூட வலியில்லை

இடுகையிட்டது dinesh வியாழன், 5 மார்ச், 2009

என் பிறப்பின் பிற்குறிப்பு பிதற்றுகிறது!
உன் பெயரின் முதல்
எழுத்தைநீயோ..............
எழுதித்தான் வைத்தாய்
என் பெயரைகாகிதத்திலா?
இல்லை கனவிலா?

பிரிதல் கூட வலியில்லை
இந்த புரிதலின்மை போல!
நேசக் கூட்டின் நினைவலைகளில்
நீயும் எனக்கொரு
துளிஅமிர்தமா?
விஷமா?

கரைந்து போ இல்லை
காணாமல் போ!
ஆனால்
இருந்து கொண்டு
என்னை இம்சை படுத்தாதே.

போதும் இந்த முகப் பூச்சு
பேதை நெஞ்சில் பெரும் காற்று.
போகப் போக சுழியாச்சு
உன் அன்பு என்னும் ஒரு ஊற்று.

வரம் ஒன்று தா தாயே

இடுகையிட்டது dinesh

நாட்கள் அலட்சியமாய்
அடுத்தவர்களைப் பற்றிச்
சிந்திக்காமலேயே நகர்ந்தபடி
தவறவிட்ட எத்தனையோ
ஆசைகள் தேவைகளைக் காவியபடி
கொஞ்சமாவது
மனச்சாட்சியே இல்லாததாய்

மிகமிகத் தவறிய
உறவுகள் சொந்தங்கள்
தவறினாலும்...
தேடிக்கொண்டேயிருக்கும்
உறவாய் பெற்றவர்கள்
அப்பா...அம்மா

மாறாத ரணமாய்
புரையோடியபடி
அவர்களின் நினைவுகள்
தேவையாயிருக்கிறது
அன்பும் ஆறுதலும் அரவணைப்பும்

வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது

வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்

ஏங்கும் மனப்புகை கண்குழி பட்டு
ஆவியாகி கண்ணீராய்த் தெறிக்கும்
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இரவை நனைக்கையில்
தலையணையையும் நனைத்தபடி
சுற்றும் பூமியில் ஆயிரம் உறவுகள்
இருந்தும்...
சுயநலமில்லா உறவு

உங்களுக்காய் காத்திருக்கிறேன்
தளர்ந்துவிட்ட விரல்களின்
வருடலுக்காய்.
தலைகோதும் தழுவலுக்காய்

அம்மா...அம்மா
ஆசையாய் இருக்கிறது
ஒரு முறை
ஒரே ஒரு முறை
உருமாறிச் சிறிதாகும்
வரம் ஒன்று தா தாயே
மீண்டும் கொஞ்சம் குடியிருக்க
உன் இருண்ட கருவறைக்குள்!!!

என்னுள் நீயிருப்பாய்...

இடுகையிட்டது dinesh

காதலே வேண்டாம் என்று
என் இதயத்தைப்
பூட்டி வைத்ததேன்
என்னை அறியாமலே
என் மனதில்-இடம்
பிடித்த காதலியே..

என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி
நிற்கும் நம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன் நான்
வாடி மடிந்தாலும்...
நீ வாழ்க என்று....!

நாம் ஒன்றாய்
கழித்த அந்த நினைவுகளை
என் இதயத்தில்
செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கின்றேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும்
பிரித்துச் செல்ல நினைக்காதே......
நானில்லாமல் நீயிருப்பாய்.........
ஆனால்.....
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்..

நினைக்க மறந்த இரவொன்றில்

இடுகையிட்டது dinesh புதன், 4 மார்ச், 2009

உன்னை நினைக்க மறந்த இரவொன்றில்
நிலவின் துணை கொண்டு
எழுதிய கவிதை இது
தயவு செய்து வாசித்துவிடாதே

உன் கண்ணீரை ஏந்தினால்
என்கவிதை இறந்துவிடும்
காலங்கள் கரைந்தாலும்
கரைசேராத நதியாய்
தேங்கியபடியேகிடக்கிறது
என் காதல்

உன்னால்
காதல் எனும் வானத்தில்நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை
எண்ணியபடியே சிறகுகள்
இன்றிதனிமரமாய்
இன்று நான்.

என் காதல் உன்னை
மட்டும் காதலிக்க கற்றுத்தரவில்லை
உன்னைத் தவிர யாரையும்
காதலிக்க கூடாது
என்பதையும்தான் கற்றுத்தந்தது

உன்இரவுகளின் தாலாட்டு
எது என்பதை நானறியேன்
ஆனால்
என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும்
என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை

நீ என்னோடு இருந்தபோது
ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் -இருந்தது
என் வாழ்க்கை

இன்று நீ மறந்திருக்கக்கூடும்
உன் இதயத்தை
காதலால்தான்
வாங்கிக் கொண்டேன் என்பதை
ஆனால்
நான் மறக்கவில்லை
நீ வார்த்தைகள் எனும்
அடியாட்களைக் கொண்டு
என்னை அகதியாய்
விரட்டி அடித்ததை

என்றோ ஓர் நாள்
யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் -உன்
இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில்
சந்தோசப்பட்டாலும் உன்
இதயத்தில் தொடர்ந்துவாழ
வாய்ப்பில்லாமல் போனதைவிட
உன் இதயத்தில் நான்
இறக்காமல் போனதில்
கவலைதான் எனக்கு

உன்னால் என் தனிமைக்கு
மிஞ்சியிருப்பது என் பேனா மட்டும்
பாவம் அது நான் அழுதால்
உடனே அழ அரம்பிக்கிறது இருவரில் யார்
அழுதாலும் உன்னால் குறையப் போவது
எங்கள் ஆயுள்தான்

பாவப்பட்டவன்கைக்கு விலைபோன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்
இன்று
என்னைவிட என் பேனா
அதிகமாக அழுகிறது

பாவம் நான்
எனக்கிருக்கும் உறவை அழ
விட்டு விட்டு என்ன
செய்யப்போகிறேன் -எனவே
உனக்கு சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன்
இறந்து போன -என்காதலை
எரிக்க மனமின்றி என்னைக் கொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்

முடிந்தால்
நான் இறந்த மூன்றாம் நாள்-வா
காதல் சாம்பலோடு
என்னையும் சேர்த்து அள்ளலாம்.