எப்படி மறப்பேன்

இடுகையிட்டது dinesh புதன், 6 மே, 2009

எல்லா ஊதுபத்தியும்
எரிந்த பிறகும்
அட்டை பெட்டியில்
ஒட்டி இருக்கிறது
ஊதுபத்தி வாசம்

பூக்கள் எல்லாம்
பறிக்கப்பட்ட பிறகும்
பூங்காவில் தவழ்கிறது
பூ வாசம்

எத்தனைமுறை
கழுவினாலும்
எண்ணை பசை
சுமக்கிறது,நேற்றைய பொழுதில்
ஏற்றிய தீபம்

எல்லாவற்றிலுமே
இருக்கின்றன
பழைய நினைவுகளின்
பதிவுகள்

மணமாகி விட்டதால்
மறந்துவிடு
என்கிறாயே
எப்படி மறப்பேன்
நான் மட்டும்
உன்னை?

தனித்த இரவுகளில்

இடுகையிட்டது dinesh செவ்வாய், 5 மே, 2009

பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக

மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக..

கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களக..

தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணிரக..

வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதிதாய்
பிறக்கத்தான் செய்கின்றது
காதல் காதலாக..

புன்னகையை சிந்துகிறாய்

இடுகையிட்டது dinesh

அழகிய
புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன்
என்கிறாய் நீ

உன் கூந்தலில்
ஒரு ஒற்றை
ரோஜாவை
சூடி விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா
மலர்ந்திருக்கிறது
என்கிறேன் நான்

பவித்திரமானதொரு
புன்னகையை
சிந்துகிறாய்
தரையெங்கும்
மல்லிகைபூக்க்ள்
சிதறுகின்றன.

அதிகம் விரும்புவேன்

இடுகையிட்டது dinesh

நிலவின் அழகைவிட
அமைதியைத்தான்
அதிகம்
விரும்புவேன்

மழைத்துளியின்
அழகைவிட
மண்வாசனையைத்தான்
அதிகம்
விரும்புவேன்

மல்லிகையின்
அழகைவிட
மணத்தைதான்
அதிகம்
விரும்புவேன்

என்றுமே
அழகை மட்டும்
வைத்து எதையும்
ரசித்ததில்லை

முதல் முறையாக
ரசிக்கிறேன்
பூவைவிட
மெல்லிய உன்
அழகிய மனதை!

அறியாத விழிகள்

இடுகையிட்டது dinesh

சாலையோர பூக்கள் ரசிக்கும்
மனது
பட்டாம் பூச்சியாய்
சுற்றித்திரியும் வாழ்க்கை

கண்ணீருக்கு கூட அர்த்தம்
அறியாத விழிகள்
எப்போதும் என்னுடன்
இருக்கும் உதட்டோர
குறும்பு புன்னகை

மழலை மொழிரசிக்கும்
நெஞ்சம்
இரவு நேர மெல்லிசை
இளமை கால
இலட்சியங்கள்

இவை எல்லாவற்றையும்
தொலைத்துவிட்டு உன்
கதலுக்காக
காத்திருக்கும் போது
உணருகிறேன்.

உன் "சம்மதம்" என்கிற
ஒற்றை வார்த்தையால்
திருப்பி தர முடியுமா?
சுயம் தொலையாத என்னை!