உன்னருகில் நான் வரவே

இடுகையிட்டது dinesh சனி, 7 மார்ச், 2009
பிரியம்
என்பது எளிதல்ல,
குறிப்பாக பிரிந்திருக்கும்
தொலை தூரத்தில்.

சந்தேகங்களும்
பயங்களும் சாதாரண
உறவினிடை கொந்தளித்துக்
கொண்டிருக்கும்
இனியும் பிரிந்திருந்தால்

நாமிருந்த
இணையத்தில்
குறைந்தபட்சம்
சிரித்திருந்தோம்,
நம்மின் சந்தேகத்தினிடையே
நலமுடன் நாம்
தெரிந்திருந்தோம்,
நம்மின் கனிவுமிகு காதலினை

அதனால்
நம் பயமெல்லாம்
மாயமாய் மறைந்ததை
நாம் அறிந்துமிருந்தோம்.
ஆனால்
இன்றோ நாம் பிரிந்து உள்ளோம்

அதனால்
சில சமயம் எழும்
சந்தேகங்களை
இயற்கை என
எண்ணிக்கொள்(ல்)வோம்

இமைப்பொழுதில்
உனை நினைக்கையில்
என்றுமில்லாத
எதனையோ இழக்கின்றேன்

உன் புன்னகையின்
மெல்லினத்தை,
உன் அன்புநிறை
சாரீரத்தை,
எனைச்சுற்றி
நீ வளைத்த
உன் இதமான
வளை கரத்தை

உன்மேல்
நான் கொண்ட அன்பு
எத்துனை வலிமையது
என்பதனை உன்னிடம்
நிரூபிக்க விடாமல்
இந்த தூரமும்
என்னை தொந்தரவு செய்கிறது

நீ கொண்டுள்ள பயத்தை,
பாரத்தை
நிரந்தரமாய் நீக்கிடவும்,
உன் கண்ணெதிரே தோண்றி
நிலைத்திருக்கும்
என் அன்பை
உன்னிடத்தில் கொடுத்திடவும்

எனக்கு நீ
எத்துனை உகந்தவள்
என்பதனை இதமாய்
எடுத்துரைத்திடவும்
என் ஏக்கமெல்லாம்
உன்னருகில் நான் வரவே.