காதல் நிலா

இடுகையிட்டது dinesh திங்கள், 23 மார்ச், 2009
காகிதங்கள் நனைந்து
காய்கிறது கண்ணீராலே!
பேனாவோ
நடு நடுங்குகிறது
எழுத்துக்களின்
வேகம் கண்டு!

சிந்தனை துளிகள்சேர்த்து
சிற்பியாய் மாறலாமென
சிற்பச் சாயல்களை
படித்து சிறப்பம்சங்கள் வைத்து
சிற்பமாய் செதுக்குகிறேன்
சிந்தனையில் குளிப்பவளை!

கனவுகளில் காணும்
காட்சிகளை கறுப்புப்
பொட்டி கொண்டு
மீட்டுப் பார்த்தாலும்
காயம் கொடுத்தவளை
நிராகரிக்க
காளையிவன் முடியேனடி!

வாக்கியத்தின்
முற்றுப் புள்ளியோடு
முடியாத வரிகள்
முடங்கி முடங்கி
போகும்
ஒற்றையடி பாதையின்
பயணமாய் பயணிக்கிறது
உந்தன் ஒளி தேடி!

இன்பத்துக்குள்ளாகியும்
என்னை இணக்கமில்லாது
ஏறிட்டுப் பார்க்கும்
உந்தன்உறவு கூட
ஓர் புதுமையானதாய்
ஓராயிரம் ஜாடைகள் சொல்லுதடி
இருவருக்கும் மத்தியில்!

காற்றுப் பொதி கூட
காளானை உசிப்பிவிட்டுஎங்கே?
உனது காதலி!
என வினா தொடுத்துவிட்டு
அதோ பாரடா!
உன்னவள் உனக்கு
மேலே
ஒளியாய் இருக்கிறாள்
என்றுஉயிரை விடுகிறது…..!!!!!